Department Programmes
தமிழ்த் துறையின் நடவடிக்கைகள்:
நம் மாணவர்கள் வகுப்பறையில் மட்டுமல்லாமல் வகுப்பறைக்கு அப்பாலும் பல வளமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.
தமிழில் சங்கமம்
மாணவர்கள் தங்கள் மொழி வளத்தைப் பெருக்கிக் கொண்டு சரளமாகவும் தன்னம்பிக்கையுடனும பேசி பன்முகக் கலைகளிலும் தங்கள் திறனை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வு தமிழில் சங்கமம்.
வகுப்பு ஒன்று: எதிர்காலத்தில் நான்
ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் தம்மைப் பற்றியோ தங்கள் உடன் பிறந்தவர்கள் பற்றியோ, குடும்பத்தினர் பற்றியோ தங்களுக்கு பிடித்தமானவற்றைப் பற்றியோ வகுப்பில் அனைவர் முன்னிலையிலும் தயக்கமின்றித் தன்னம்பிக்கையுடனும் ஊக்கத்துடனும் பேசுவதற்கான பயிற்சியைப் பெறுவர். இதன்வழி மாணவர்கள் தமிழில் சரளமாகப் பேசுபவராகவும் கருத்துப் பரிமாற்றம் செய்பவராகவும் உருவாகுவார்கள் என்பது நிச்சயம்.
வகுப்பு இரண்டு: பாட்டு பாடுவோம் வாரீர்
இரண்டாம் வகுப்பு மாணவர்கள் பாடல்கள் வழி சொல் வளத்தைப் பெருக்குவதோடு அவற்றின் பொருள் உணர்ந்து உடல் அசைவுகளோடு மகிழ்ச்சியான சூழலில் பாடுவர்.
வகுப்பு மூன்று: கதைக் கூறுவோம் வாரீர்
மாணவர்கள் மாதத்திற்கு ஒருமுறை பொருத்தமான கதைகளை வாசித்த பிறகு அவற்றைச் சுருக்கிக் கூறுதல், விமர்சனம் செய்தால்,புதிய சொற்களை அறிதல் கதையை மாற்றி அமைத்தல்,புதிய கதைகளை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
வகுப்பு நான்கு: அறிமுகம் செய்வோம் அறிந்து கொள்வோம்
மாணவர்கள் மாதத்திற்கு ஒருமுறை யாரேனும் ஒரு பிரபலத்தைப் பற்றி வகுப்பில் எல்லார் முன்னிலையிலும் அறிமுகம் செய்வார்கள். மாணவர்களின் படைப்பு ஆக்கத்தையும் புத்தாக்கத்தையும் சிந்தனைத் திறனையும் வளர்ப்பது இந்த நடவடிக்கையின் நோக்கம் ஆகும். இந்த பயிற்சி ‘விளம்பரம் செய்வோம்!’என்ற போட்டிக்கு மாணவர்களைத் தயார் செய்ய உதவுவதோடு ஆர்வமூட்டும் வகையில் தமிழை கற்கவும் உதவும்.
வகுப்பு ஐந்து: அடுக்குமொழி தயாரிப்போம்! பாடுவோம்!
ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் இரு மாதத்திற்கு ஒரு முறை ஏதேனும் ஒரு கருப்பொருளை ஒட்டி பாடல் வரிகள் தயாரிப்பார்கள். இப்பாடல் வரிகள் பல நல்ல கருத்துக்களையும், விழுமியங்களையும் வெளிப்படுத்தும் வகையில் அமையவேண்டும். மாணவர்கள் தாங்கள் எழுதிய பாடலுக்கு மெட்டமைத்துப் பாடிப் பயிற்சி செய்வார்கள்.
வகுப்பு ஆறு: கூறுகிறேன் கேளுங்கள்!
மாணவர்கள் தாங்கள் படித்த கதைகளைப் பற்றியோ, செய்தி துணுக்குகள் பற்றியோ தயாரித்து படைப்பார்கள். இம்மாதிரியான படைப்புகளை மாணவர்கள் தவணைக்கு ஒருமுறை தயாரித்துப் படைப்பார்கள். இந்நடவடிக்கை மாணவர்களின் பேச்சுத் திறனை மேம்படுத்த உதவும். இந்த அனுபவம் அவர்கள் தன்னம்பிக்கையுடன் பேசுப்போட்டியில் கலந்துகொள்ள உறுதுணையாக அமையும்.
வாசிப்போம் வாரீர்
ஒன்றாம் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர் பெரிய புத்தகம் வாயிலாகக் கதைக் கூறுவார். மாணவர்கள் அதன் தொடர்பான உரையாடுதல் நடித்தல் போன்ற மகிழ்வான சூழலில் அமைந்த நடவடிக்கைகளில் உற்சாகமாக ஈடுப்படுவர்.
மூன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு மாணவர்கள் வாசிப்பு நடவடிக்கைகளில் இருவாரத்திற்கு ஒருமுறை ஈடுபடுவர். அவர்கள் கதை நூல்கள் சுட்டிமயில் மாத இதழ் போன்ற வளங்களைப் பயன்படுத்துவர்.
வாருங்கள் பேசலாம்
ஒலி 96.8 லிருந்து அறிவிப்பாளர்கள் திரு ரஃபி,திரு காதர் ஆகியோர் மாணவர்களுடன் சிற்சில நடவிக்கைகளை நடந்தி அவர்களைத் தமிழில் பேசவும் விடையளிக்கவும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தனர். மாணவர்கள் குதூகலத்துடன் இந்நிகழ்ச்சியில் கலந்தகொண்டு தமிழின் பெருமையையும் நம் முன்னோர் நாட்டிற்கு ஆற்றிய பங்கையும் அறிந்துகொண்டனர்.