Cultural Programmes
பொங்கல் கொண்டாட்டம்
ஒவ்வொரு ஆண்டும் பள்ளியில் பொங்கல் கொண்டாட்டம் நடைபெறுவது வழக்கம். நம் இந்திய மாணவர்களுக்குப் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதன் பின்னனியைக் கற்பிப்பதே அதன் நோக்கமாகும். வகுப்பறையில் பொங்கல் தொடர்பான பொருள்கள் காட்சிக்கு வைக்கப்படும்.
வகுப்பறையில் பொங்கல் கொண்டாட்டம்
மாணவர்களுக்குப் பொங்கல் தொடர்பான போட்டிகள் நடைபெறும். வண்ணம் தீட்டுதல், வாழ்த்து அட்டை தயாரித்தல், கணினியில் பொங்கல் விளம்பரங்கள் தயாரித்தல் போன்ற நடவடிக்கைகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பரிசுகள் பெறுவர்.
இடைவேளை நடவடிக்கைகள்
கற்றல் பயணம்
மாணவர்கள் உமர் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைப்பெற்ற தமிழ் மாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மாணவர்கள்:
-
தமிழரின் மரபுக் கலைகளைப்பற்றி அறிமுகம் பெறுவதோடு செயல்வழியாகக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் பெறுவர்
-
மொழி, பண்பாடுசார்ந்த கற்றல் அனுபவங்கள், வகுப்பறைக்கு அப்பாலும் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கலந்துகொண்டு சிறப்பிப்பர்.
தீபாவளி கொண்டாட்டம்
வாழ்வில் இருள் அகன்று ஒளி வீசும் என்ற கருப்பொருளை உள்ளடக்கி பள்ளியின் விழுமியங்களையும் அதோடு இணைத்து மாணவர்களுக்கு தீபாவளியின் சிறப்பை எடுத்துரைத்தது தீபாவளி கலைநிகழ்ச்சி.